Breaking News

மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு! முழு விபரம்

அட்மின் மீடியா
0
மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு! முழு விபரம்




தமிழகத்தில் 60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையில் உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக் குழுவின் பெயர், பிறந்த தேதி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட எண் உள்ளிட்ட விவரங்களுடன் க்யூஆர் கோடும்(QR CODE) இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல் கட்டமாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2ம் கட்டமாகவும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

சலுகைகள்:-

  • மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்கள்,
  • AC பேருந்துகளைத் தவிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்பு பொருட்களைக் கட்டணமின்றி எடுத்த செல்ல அனுமதிக்கப்படுவார்கள்!
  • கோ-ஆப்டெக்ஸில் துணிகள் வாங்கும் போது 5% கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும்.
  • கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கக்கூடிய கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • ஆவின் நிறுவன பொருள்களைச் சலுகை விலையில் பெறலாம்.
  • இணையச் சேவை மய்யங்களின் சேவைகளைப் பெறும் போது, 10% தள்ளுபடி அளிக்கப்படும்!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback