சாதி, வருமான இருப்பிட சான்றிதழ்கள் ஒரு வாரத்திற்குள் வழங்க வருவாய்த்துறைக்கு உத்தரவு
சாதி, வருமான இருப்பிட சான்றிதழ்கள் ஒரு வாரத்திற்குள் வழங்க வருவாய்த்துறைக்கு உத்தரவு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாணாக்கருக்கு, ஒரு வாரக் காலத்திற்குள் சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சான்றிதழ் கேட்டு இ சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்"-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமகிருஷ்ணன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியருக்கான சாதிச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
எந்தவித சிரமுமின்றி ஒரு வாரத்திற்குள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் அணைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர் சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்தால் வேண்டிய உதவிகள் செய்யப்படும். இ-சேவை மையத்தில் மாணவ மாணவியர் சான்றிதழ் பெற முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்