Breaking News

ஒடிசாவில் நகைக்கடைக்குள் துப்பாக்கியை காட்டி மிரட்டி 1.5 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை -அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த ஆயுத மேந்திய கொள்ளையர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு.



துப்பாக்கியைக் காட்டி, கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குற்றவாளிகளைக் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் ஐந்து ஆயுதமேந்திய கொள்ளையர்கள் ₹1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

மாலை 6.35 மணியளவில், முகமூடி அணிந்த ஐந்து மர்ம நபர்கள், ஹரிசந்தன்பூர் சந்தையில் உள்ள நாராயண் ஜூவல்லர்ஸ் கடைக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். துப்பாக்கிகளை காட்டி உள்ளே நுழைந்த அவர்கள், கடை உரிமையாளர் நாராயண் சாஹுவை துப்பாக்கி முனையில் மிரட்டினர்.

பின்னர், அவர்கள் லாக்கர் சாவியை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1-1.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். 

சம்பவம் நடந்த நேரத்தில், சாஹு உட்பட மூன்று பேர் மட்டுமே கடைக்குள் இருந்தனர். வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.

தகவல் அறிந்ததும், ஹரிசந்தன்பூர் போலீசார் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கியோஞ்சர் எஸ்பி குசல்கர் நிதின் தக்டு மற்றும் காட்கான் எஸ்டிபிஓ விஜயகிருஷ்ண மொஹபத்ரா ஆகியோரும் குற்றம் நடந்த இடத்திற்கு வந்தனர்.

நகைக்கடை மற்றும் அருகிலுள்ள நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். கொள்ளையர்களை அடையாளம் காண அருகிலுள்ள வனப்பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

Armed robbers walk into busy jewellery shop in Harichandanpur Bazar, crowded market… and no one stops themCCTV footage shows the gang threatening the shopkeeper and customers, before fleeing with cash and gold worth several lakhs..all done in just 8 minutes. Police launch a manhunt

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1940709888604492131

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback