பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கிய அழிக்கும் இந்திய ராணுவம்- பரபரப்பு வீடியோ காட்சிகளை வெளியிட்ட இந்திய ராணுவம்
அட்மின் மீடியா
0
பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கிய அழிக்கும் இந்திய ராணுவம்- பரபரப்பு வீடியோ காட்சிகளை வெளியிட்ட இந்திய ராணுவம்
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள், ஏவுதளங்கள் அழிக்கப்பட்டது தொடர்பான புதிய வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்
மே 8 மற்றும் 9, 2025 ஆகிய இரவு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தானால் திட்டமிட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த தாக்குதல் நடவடிக்கையில், எல்லையிலுள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் நாசமாக்கப்பட்டன. கடந்த காலங்களில் இம்முகாம்கள் இந்தியா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் திட்டமிடலுக்கும், பயிற்சிக்கும் முக்கிய தளமாக இருந்தன.
இந்திய ராணுவத்தின் சரியான மற்றும் விரைவான பதிலடி, பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்பையும் செயல்திறனையும் கடுமையாக பாதித்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை பொது தகவல் இயக்குநரகம் (ADG PI),
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள பல நகரங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்த முயற்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, மே 8 மற்றும் மே 9 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களை தகர்த்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தூள் தூளாக்கப்பட்டதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நம் வீரர்களின் துணிச்சல் மிக்க செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1921109204435079401
Tags: இந்திய செய்திகள்