முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் மீது வெறுப்பு காட்டாதீர்கள் - பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி மனைவி கோரிக்கை
முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் மீது வெறுப்பு காட்டாதீர்கள் - பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி மனைவி கோரிக்கை
கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார், அவர் தேனிலவில் இருந்த போது இந்த சோகம் நிகழ்ந்தது
இந்நிலையில் நேற்று வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி மனைவி ஹிமான்ஷி
அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்,என்று கூறினார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1918200211366920333
Tags: இந்திய செய்திகள்