ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது - இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது - இந்திய விமானப்படை அறிவிப்பு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
நேற்று பாகிஸ்தான் உடனான தாக்குதல் நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, தொடர்கிறது. ஆகவே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான தவறான தகவல்களை பரப்பக்கூடாது என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. தங்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்படும் என்றும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/IAF_MCC/status/1921460735575507121
Tags: இந்திய செய்திகள்