போர் நிறுத்த அறிவிப்பை மீறி பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு
போர் நிறுத்த அறிவிப்பை மீறி பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு
பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று நேற்று மாலை 5 மணி முதல் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரின் கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்ஷேராவில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் காஷ்மீரில் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திவரும் திடீர் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் முகமது இம்தேயஸ் உயிரிழந்தார். மேலும் 7 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்த 3 மணிநேரத்திற்குள் எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி வருகிறது
Tags: இந்திய செய்திகள்