Breaking News

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய 9 இடங்கள்! Operation Sindoor

அட்மின் மீடியா
0

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய 9 இடங்கள்! Operation Sindoor



காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது.இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சூழலில் மே 7ஆம் தேதி அதிகாலை 1. 44 மணிக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம் இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் உள்ளிட்ட 9 இடங்களில் இந்திய ராணுவ அதிகாரிகள் துல்லியமாக தாக்கும் அதிநவீன குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் அங்கிருந்த கட்டடங்கள் எல்லாம் தரைமட்டமாகின. இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள்:-

1மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் ஜெய்ஸ் இ முகமது அமைப்பு, 

2. மார்கஸ் தைபா, முரிட்கே லஷ்கர் இ தொய்பா அமைப்பு, 

3. சர்ஜால், தெஹ்ரா கலான் ஜெய்ஸ் இ முகமது அமைப்பு, 

4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு, 

5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா லஷ்கர் இ தொய்பா அமைப்பு, 

6. மர்கஸ் அப்பாஸ், கோட்லி -ஜெய்ஸ் இ முகமது அமைப்பு, 

7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு, 

8. ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் லஷ்கர் இ தொய்பா அமைப்பு, 

9. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் ஜெய்ஸ் இ முகமது ஆகிய 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து இன்று விரிவான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும் பாதுகாப்புத்துறை அறிவித்திருக்கிறது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback