பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் TNEA Registration 2025
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு பி.இ., பி.டெக் மற்றும் பி.ஆர்க் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க் முதலாமாண்டு சேர்க்கைக்கு அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேர மே மாதம் 7 ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க். பட்டப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 202- 2 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் இல்லாமல் நேரில் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TEA Faction Centere (TRC) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணைதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்