Breaking News

சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.ஜனார்த்தன ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு முழு விவரம் Janardhan Reddy's 7-year sentence

அட்மின் மீடியா
0

சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.ஜனார்தன ரெட்டிக்கு  7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு முழு விவரம்

சட்டவிரோத சுரங்க வழக்கில், கர்நாடகா முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான, பா.ஜ.,வைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி மற்றும் மூன்று பேருக்கு ஹைதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சுரங்க முறைகேடு தொடர்பாக 14 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 

ஆந்திராவில் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது கர்நாடகாவில் பா.ஜ., மூத்த தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவி வகித்தபோது, சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி.கர்நாடகா - ஆந்திரா எல்லையில் உள்ள கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில், இரும்புத்தாது எடுக்க சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், ஆதாரங்களை மறைத்ததாக, ஜனார்த்தன ரெட்டி மற்றும் பிறர் மீது, 14 ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாதில், சி.பி.ஐ., சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த 2007 - 2009 வரை நடந்த சட்டவிரோத சுரங்கத்தால் அரசுக்கு, 884 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக 3400 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு 219 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தீர்ப்பு:-

ஜனார்த்தன ரெட்டி, அவரது மைத்துனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முந்தைய சுரங்கத்துறை துணை இயக்குநர் வி.டி.ராஜகோபால்.ஜனார்த்தன ரெட்டியின் தனிச்செயலர் மெகபுஸ் அலிகான் உள்ளிட்ட நான்கு பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மேலும் முன்னாள் அதிகாரி பி.கிருபானந்தம் மற்றும் முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback