சென்னை ஐஐடியில் 5 இலவச ‘AI’ ஆன்லைன் படிப்புகள் முழு விவரம் இதோ iit madras ai free course
சென்னை ஐஐடியில் இலவச ‘AI’ ஆன்லைன் படிப்புகள் முழு விவரம் இதோ
சென்னை ஐஐடி ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகம் செய்துள்ளது.
'ஸ்வயம் பிளஸ்' கல்வி திட் டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான 5 ஆன்லைன் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
ஸ்வயம் பிளஸ் ஆன்லைன் கல்வி திட்டத்தின்கீழ் இயற் பியலில் ஏஐ, வேதியியலில் ஏஐ, கணக்குப்பதிவியலில் ஏஐ, கிரிக்கெட் அனலிட்டிக்ஸ் வித் ஏஐ, ஏஐ மற்றும் எம்எல் யூசிங் பைத்தான் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக 5 ஆன்லைன் படிப்புகளை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இந்த ஆன் லைன் படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியில் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சேரலாம். ஏஐ தொடர்பான அடிப் படை விவரங்கள் தெரிந்திருக்க அவசியம் இல்லை. புதிய விஷ யங்களை கற்கும் ஆர்வம் இருந்தால் போதும். ஏஐ அறிவு அனைவரையும் சென்றடைய வேண் டும் என்பதுதான் இந்த கல்வி திட்டத்தின் நோக்கம்.
இந்த ஆன்லைன் படிப்பு களில் சேர விரும்புவோர் மே 12-ம் தேதிக்குள் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதள இணைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்