தண்ணி கேன் பயன்படுத்துபவர்களுக்கு :- 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் - தரமற்ற கேன் குடிநீரை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது
குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
தரமின்றி, முறையான அனுமதி இன்றி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு லி. குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மி.கி:மெக்னீசியம் 5 முதல் 30 மி.கி இருத்தல் அவசியம். முறையான அனுமதி, உற்பத்தி,காலாவதி தேதி, குடிநீர் சுத்திகரிப்பு முறைகளை பின்பற்றவும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்