கலைஞர் கைவினைத்திட்டம் மூலம் ஜாமின் இல்லாமல் 3 லட்சம் வரை கடன் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் Tamil Nadu Kalaignar Kaivinai Thittam 2025: Apply Online
கலைஞர் கைவினைத்திட்டம் மூலம் ஜாமின் இல்லாமல் 3 லட்சம் வரை கடன் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
வேலூர் மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கலைஞர் கைவினைத்திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சம் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் 50 ஆயிரம் வரை மானியம் பெறலாம். இத்திட்டத்தில் தொழிற்கடன் பெற்று தொழில் தொடங்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 19ம் தேதி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மானியத்துடன் ரூ. 170 கோடி வழங்கி விழா பேருரை ஆற்றினார். வேலூர் மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கலைஞர் கைவினைத்திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சம் வரை பிணைபற்ற கடனுதவி மற்றும் 50 ஆயிரம் வரை மானியம் பெறலாம். 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.எந்த வகுப்பினராகவும் இருக்கலாம்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கட்டிட வேலைகள், மர வேலைபாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல். மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம். அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மட்பாண்டங்கள். சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல். படகுக் கட்டுமானம். துணி வெளுத்தல், துணி தேய்த்தல். சிற்ப வேலைப்பாடுகள். கற்சிலை வடித்தல். ஓவியம் வரைதல் வண்ணம் பூசுதல் கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர் வேலைபாடுகள், உலோக வேலைப்பாடுகள். பாசி மணி வேலைப்பாடுகள், கைவினைப்பொருட்கள், மூங்கில், பிரம்பு சணல் பனை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினை தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இதுவரை வேலூர் மாவட்டத்தில் 1346 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 899 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 353 கடன் ஒப்பளிப்புகள் இதுவரை பெறப்பட்டுள்ளன. 74 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடன் ஒப்பளிப்பு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக கடன் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க https://www.msmeonline.tn.gov.in/kkt/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் பெறவும். கூடுதல் வழிகாட்டுதலுக்கும் பொது மேலாளர். மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூர் ரோடு, காந்தி நகர், வேலூர் 632 006 என்ற அலுவலகத்தை அணுகலாம் மற்றும் 0416-2242413, 2242512 8925534030. 8925534029, 8925534032 தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags: தொழில் வாய்ப்பு