எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு முழு விவரம் poonch attack
எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு முழு விவரம் poonchattack
இந்திய பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், அப்பாவி மக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 இந்தியர்கள் பலி; 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு தரப்பிலும் மாறிமாறி தாக்குதல் நடத்துவதால் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின.
26 முறை துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் முகாம்கள் அழிக்கப்பட்டு முக்கிய பயங்கரவாதிகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குறைந்த 12 பேர் உயிரிழந்தனர். 57-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா மீது பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
Tags: இந்திய செய்திகள்