ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம் - குடும்பத்தினர் 14 பேர் பலி முழு விவரம்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம் - குடும்பத்தினர் 14 பேர் பலி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி மற்றும் உறவினர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா, மே 7, அதிகாலை 1.30 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தது.
இதில் மசூத் அசாரின் குடும்பத்தினர் பஹாபல்பூரில் வசித்து வந்தனர். இந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் வீட்டின் மீது இந்திய விமானப்படை அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த தாக்குதலகள் நடந்தபோது மசூத் அசார் வீட்டில் இல்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்,
2016 பதான்கோட் தாக்குதல்
2019 புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவர் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படுகிறார்.
1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்டபோது, பயணிகளை விடுவிப்பதற்காக அவரையும் மற்ற இரண்டு பயங்கரவாதிகளையும் விடுவிக்குமாறு பயங்கரவாதிகள் கோரியதன் விளைவாக, வேறு வழியில்லாமல் அவர் இந்தியாவால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: இந்திய செய்திகள்