Breaking News

நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு Tamil Nadu Weather

அட்மின் மீடியா
0

 நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு Tamil Nadu Weather

மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் மே.22ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது வடக்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். இதன் காரணமாக நாளை (மே.20) கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

20-05-2025: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback