12 ம் வகுப்பு அரியர் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்
துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
துணை தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் தனித்தேர்வர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
+2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் மே 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 13 முதல் 17 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25 - தமிழ்,
ஜூன் 26 - ஆங்கிலம்,
ஜூன் 27 - கணிதம், விலங்கியல்,வணிகவியல்,
ஜூன் 28 - கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல்,
ஜூன் 30 - வேதியியல், கணக்கியல், புவியியல்,
ஜூலை 01 - உயிரியல் , தாவரவியல், வரலாறு,
ஜூலை 02 - இயற்பியல் பொருளாதாரம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகிறது.
தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: கல்வி செய்திகள்