இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு உத்திரபிரதேசத்தில் தனது கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவன்!Ram Kewal
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தனது கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவன்! For the first time since Independence, Ramsevak from Dalit-majority Nizampur (Barabanki) passed 10th grade.
உத்தர பிரதேசம், நிஜாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது ராம்கேவல், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் குக்கிராம மாணவரானார்.
இது பற்றி அவர் கூறுகையில்:-
கிராமத்தில் சிலர் என்னை கேலி செய்து, நான் உயர்நிலைப் பள்ளியில் ஒருபோதும் தேர்ச்சி பெற மாட்டேன் என்று கூறினர்.
திருமண ஊர்வலங்களில் விளக்குகளை ஏந்திச் சென்று, வீட்டுச் செலவுகளுக்குப் பங்களித்து, ஒரு நாளைக்கு ரூ.250–300 சம்பாதித்தேன்" என்றார்.
ராம்கேவல் நிஜாம்பூருக்கு அருகிலுள்ள அகமதுபூரில் உள்ள அரசு இடைநிலைக் கல்லூரியில் படித்தார்.அவரது சாதனையால் நெகிழ்ச்சியடைந்த பராபங்கி மாவட்ட நீதிபதி சஷாங்க் திரிபாதி, ராம்கேவலையும் அவரது பெற்றோரையும் கௌரவித்தார்.
Tags: இந்திய செய்திகள்