அங்கன்வாடி பணி விண்ணப்பம் டவுன்லோடு செய்ய TN Anganwadi Recruitment 2025
தமிழக அரசின் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர். குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்காடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் TN Anganwadi Recruitment 2025
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர். குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்ககளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.01.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாத சம்பளம்:-
அங்கன்வாடி பணியாளர். குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியிலன முடித்தப்பின் அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் மாத மொன்றுக்கு ரூ.7700 எனவும். பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.7700 24200 என்ற விகிதத்தில் வழங்கப்படும்.
மேலும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு ரூ.5700 எனவும். பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.5700 - 18000 என்ற விகிதத்திலும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு ரூ.400 எனவும். பன்னிரெண்டுமாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.4100 - 12500 என்ற விகிதத்தில் வழங்கப்படும்.
வயது வரம்பு:-
பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12.ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தமிழ் சரளமாக எழுதப் படிக்சு தெரிந்திருக்க வேண்டும்.
மேலும், விதலைகள், ஆதரவற்ற பெண்கள். எஸ்சி எஸ்டி வகுப்பினர் 26 வயது முதல் 40 வயது வரையிலும், மாற்றுத்திறனாளி பெண்கள் 25 முதல் 38 வயது வரையிலும் இருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் விதவைகள் ஆதரமற்ற பெண்கள். எஸ்சி/ எஸ்டி வகுப்பினர் 20 வாயது முதல் 45 வயது வரையிலும் மாற்றுத்திறனாளி பெண்கள் 20 முதல் 43 வயது வரையிலும் இருக்க வேண்டும்.
கூடுதல் தகவல்கள்:-
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரம் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அதே கிராம ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்தை சேர்ந்தவராகவோ அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவோ இருத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டு அல்லது மைய அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் லார்சேர்ந்தவராகவோ இருத்தல் வேண்டும்.
தேவையான சான்றிதழ்:-
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து காலிப்பணிபிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம் குழந்தை வணர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை ஆதார் அட்டை சாதிச்சான்று வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
மேலும், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர். ஆதரவற்ற பெண் (தாய்தந்தை இறப்பு சான்று மற்றும் மாற்றுத்திறனா அதற்கான சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இலணக்க வேண்டும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்ப படிவம்:-
Anganwadi_helper_application
Anganwadi_worker_application
Mini_Anganwadi_worker_application
குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கான விண்ணப்பம் கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2025/04/2025040779.pdf
அங்கன்வாடி பணியாளர் பணிக்கான விண்ணப்பம் கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2025/04/2025040727.pdf
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம் கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2025/04/2025040767.pdf
Tags: வேலைவாய்ப்பு