Breaking News

சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற தீவிரவாதிகளுடன் போராடி உயிரைவிட்ட இஸ்லாமியர் - நடந்தது என்ன முழு விவரம் Syed Adil Hussain

அட்மின் மீடியா
0

சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற தீவிரவாதிகளுடன் போராடி உயிரைவிட்ட இஸ்லாமியர் - நடந்தது என்ன முழு விவரம்



பஹல்காம் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய தொழிலாளி சையது ஆதில் ஹுசைன் ஷா, அப்பகுதியில் குதிரையேற்றம் சவாரி தொழில் நடத்தி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். 

நேற்று வழக்கம் போல சுற்றுலா பயணிகள் மத்தியில் வேலை பார்த்து வந்த ஹுசைன் ஷா, திடீரென பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை துப்பாக்கிகளால் தாக்குவதை கண்டுள்ளார்.

உடனடியாக களத்தில் இறங்கி, பயங்கரவாதிகள் வசம் இருந்த துப்பாக்கிகளை பறிக்க முயன்றுள்ளார். இதில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சையது அடில் ஹுசைன் ஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர்தான். தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தால் தன்னை நம்பி வந்த சுற்றுலா பயணிகளின் உயிரை பாதுகாக்க நினைத்த அவரது மனதிற்கு ஈடு இணையே கிடையாது. இந்த இடத்தில் தன்னுடைய மதத்தை கடந்து மனித நேயத்தை அவர் பின்பற்றி அதற்கு விலையாக உயிரையே கொடுத்திருக்கிறார்.

அனந்த்நாக் பகுதியில் உள்ள சையது அடில் ஹுசைன் ஷாவின் சொந்த கிராமத்தில் அவருக்கு இறுதி சடங்குகள் நிகழ்ந்து. முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரும் அதில் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, 

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரது இறப்பு சாதாரணமானதாக இல்லை. தன்னுடைய துணிச்சலை அவர் நிரூபித்திருக்கிறார். தாக்குதலை தடுக்க முயற்சி செய்திருக்கிறார். அவரது குடும்பத்தை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். தேவையான உதவிகளை செய்வோம்” என்றார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback