போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் சற்று முன்னர் மரணமடைந்தார் pope francis died
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் சற்று முன்னர் மரணமடைந்தார்
நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் சற்று முன்னர் காலமானார்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி ரோம் நகரிலுள்ள கெமிளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து 9 நாள்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு, சமீபத்தில் சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டதாக வாடிகன் தெரிவித்திருந்தது.
அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது.
ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது.
பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த போப், மருத்துவ அறிவுரைகளை மீறிதான் நேற்று ஈஸ்ட்டரை முன்னிட்டு பொதுமக்கள் முன் தோன்றினார் என்பது குறிப்பிடதக்கது.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 35,000 பேர் கொண்ட கூட்டத்தை அவர் ஆசீர்வதித்து கையசைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சிறிது நேரம், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் தனிப்பட்ட சந்திப்பை நிகழ்த்தினார்.
திருச்சபை வரலாற்றில் மிகவும் வயதான போப்களில் ஒருவராக போப் பிரான்சிஸ் இருந்தார்.
ஒரு போப்பின் மரணம் அல்லது ராஜினாமா உள்ளிட்ட சூழல் ஏற்பட்டால், வாடிகன் ஒரு போப்பாண்டவர் கூட்டத்தை நடத்தும்.அதில் திருச்சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க கார்டினல்கள் கல்லூரி கூடும்.
ஜனவரி 22, 2025 நிலவரப்படி, 252 கார்டினல்களில் 138 வாக்காளர்கள் உள்ளனர்.சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும் இந்த ரகசிய வாக்கெடுப்பில் 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.தேர்தலுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை, பொதுவாக 15-20 நாட்கள் ஆகும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்