பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு Nainar Nagendiran
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகின்றார் Nainar Nagendiran
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார்.
பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிமுதல் விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விருப்ப மனுவை சமர்ப்பிக்க மாலை 4 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாஜக தலைவர் போட்டியில் தான் இல்லை என்று ஏற்கெனவே தற்போதைய தலைவர் அண்ணாமலை அறிவித்துவிட்டார். பிரதமா் நரேந்திர மோடியின் ராமேசுவர நிகழ்வில் நயினார் நாகேந்திரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், அவர் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவின.
பாஜக மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்யும் போது அண்ணாமலை, வானதி சீனுவாசன், ஹெச்.ராஜா, எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் நயினார் நாகேந்திரனை பரிந்துரை செய்துள்ளனர்
நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாவதை உறுதி செய்யும் விதமாக அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்கும் அரங்கின் பின்னணியில் உள்ள திரையில் நயினார் நாகேந்திரன் படமும் இடம்பெற்றுள்ளது.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.
Tags: அரசியல் செய்திகள்