முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு தமிழ்நாட்டில் தடை! mayonnaise ban tamilnadu
தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு முட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைசை உற்பத்தி செய்ய, சேமிக்க, விநியோகம் செய்ய அல்லது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
![]() |
mayonnaise ban tamilnadu |
மையோனைஸ் என்றால் என்ன:-
ஃப்ரெஞ்ச் cuisine இல் இது Cold Sauce ( குளிர்ந்த சாஸ்) வகைப்படும். அதாவது மற்ற சாஸ்கள் சமைக்கப்படும் மயோனைஸ் சமைக்க படுவதில்லை.
அதாவது முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதில் சாலட் ஆயிலை மெதுவாக சேர்த்து ( beat) கலக்குவார்கள், அதில் சேர்க்கப்படும் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு முட்டையும் எண்ணையும் தனியாக பிரிக்காமல் ஒன்று சேர்த்து அழகிய கிரீமி texture சாஸ் தான் இந்த மயோனைஸ்! இது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் சாண்ட்விச், பர்கர், கிரில் சிக்கன், மோமோஸ், ஷவர்மா உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சாப்பிடும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது.
மேலும் சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் மயோனைஸ் தயார் செய்யப்படுகிறது
மையோனைஸ் தீமைகள்:-
தற்சமயம் எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருப்பதால் ஒரு நிமிடம் கூட நிம்மதி கிடைக்காத நிலை உள்ளது. இந்த வேகமான வாழ்க்கையில், எல்லோரும் வேகமாக இருக்க விரும்புகிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், துரித உணவு அவர்களின் அன்றாட வழக்கத்தின் முக்கிய அங்கமாகிவிட்டது. பெரும்பாலும் வெளியில் இருப்பதால், மக்கள் பெரும்பாலும் துரித உணவுகளை சாப்பிடுகிறார்கள்.
துரித உணவுகளுடன், மயோனைஸ் சாப்பிடும் போக்கும் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால் மயோனைசை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களுடன் மயோனைஸ் பரிமாறப்படும் போது குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களால் உணவு நச்சுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதன் காரணமாக மயோனைஸ் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு
மையோனைஸ் தடை:-
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு30 -2 (அ)ன் கீழ் எடுக்கப்பட்டிருக்கிறது.ஓராண்டிற்கு மையோனைஸ் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
மயோனைஸ் மனிதர்கள் உண்ணத் தகுந்தது அல்ல என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறிள்ளார்கள்
உணவின் தரம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கடைகளில் மையோனைஸ் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்