Breaking News

ஐதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முகமது அசாருதீன் பெயரை நீக்க உத்தரவு முழு விவரம் இதோ HCA ordered to remove Mohammed Azharuddin's name

அட்மின் மீடியா
0

ஐதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முகமது அசாருதீன் பெயரை நீக்க உத்தரவு முழு விவரம் இதோ HCA ordered to remove Mohammed Azharuddin's name

VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என்பது முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.அப்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் இருந்தார்.

ஐதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, முன்னாள் வீரர் முகமது அசாருதின் பெயர் சூட்டப்பட்டது

இது தொடர்பாக லார்ட்ஸ் கிரிக்கெட் கிளப் தாக்கல் செய்த மனுவின் மீது இன்று நடைபெற்ற விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என இருந்ததை 2019ம் ஆண்டில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, 'முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது

இது அதிகார துஷ்பிரயோகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீதிபதி ஈஸ்வரய்யாவின் கூற்றுப்படி, முகமது அசாருதீன், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில், மைதானத்திற்கு தனது பெயரை வைக்க முடிவு செய்தார். இருப்பினும், இந்த முடிவு செல்லாது என்று குறைதீர்ப்பாளர் கூறினார், 

அத்தகைய நடவடிக்கை நலன் முரண்பாட்டை உள்ளடக்கியது என்று வலியுறுத்தினார்.தனது தீர்ப்பின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு, வடக்கு ஸ்டாண்டிலிருந்து அசாருதீனின் பெயரை நீக்குமாறு நீதிபதி ஈஸ்வரய்யா அறிவுறுத்தினார். மேலும், சங்கத்தால் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எந்த டிக்கெட்டுகளிலும் அசாருதீனின் பெயர் இடம்பெறக்கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback