CBSE 10 மற்றும் 12 Result மொபைலில் பார்ப்பது எப்படி முழு விவரம் இதோ2025
CBSE 10 மற்றும் 12 Result மொபைலில் பார்ப்பது எப்படி முழு விவரம் இதோ2025
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் CBSE 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 அன்று முடிந்தது. அதேபோல் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி நிறைவடைந்தது.
CBSE பொதுவாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தின் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
எனினும் அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிர்காரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் சரிப்பார்க்கலாம்.
தேர்வர்கள் அரசின் அதிகாரப்பூர்வமான cbseresults.nic.in இணையதளத்திற்கு சென்று தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விபரங்களை குறிப்பிட்டு மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். அதனை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்
ஆன்லைனில் பார்ப்பது எப்படி:-
மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் சரிபார்த்து ஆன்லைனில் ரிசல்டை பெறலாம்.
அதில் ரோல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உங்கள் தேர்வு முடிவை பார்க்கலாம்
டிஜிலாக்கரில் சிபிஎஸ்இ முடிவை பார்ப்பது எப்படி:-
https://www.digilocker.gov.in/ என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் லாகின்செய்யுங்கள்
அடுத்து அதில் உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள்
அடுத்து அதில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கிளிக் செய்து 'சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான டெர்ம் 2 ஆம் வகுப்பு முடிவுகள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.
எஸ் எம் எஸ் மூலம்
CBSE 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் "CBSE 12 / 10 (ரோல் எண்) (DDMMYYYY - பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)" என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.
Tags: கல்வி செய்திகள்