வீடுகளை குத்தகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விட்டால் மோசடி வழக்கு - தமிழக காவல்துறை வெளியிட்ட வீடியோ
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல் மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்குகாக பதிவு செய்யப்படும்தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி
சென்னை முகப்பேரில் உள்ள கனகராஜ் என்பவரின் வீட்டை குத்தகைக்கு எடுத்த ராமலிங்கம் என்பவர் வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் மூன்றாம் நபருக்கு அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக அளித்த புகாரில் நொளம்பூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது போன்ற மோசடிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக டிஜிபி தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், இது போன்ற புகார்களை சிவில் வழக்காக பதிவு செய்யாமல் உடனடியாக மோசடி வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும்
அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மோசடியை தடுக்கவும், கண்காணிக்கவும் மாவட்டம் தோறும் உயர் மட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த மோசடியை தடுக்க மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை தரப்பில் குறும்படம் தயாரிக்கப்பட்டு, அந்த வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு வீடியோவை பார்த்த நீதிபதி, காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்து, விழிப்புணர்வு வீடியோவை சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு இது போன்ற மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1915044636080640254
Tags: தமிழக செய்திகள்