தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - செந்தில் பாலாஜி , பொன்முடி விடுவிப்பு! முழு விவரம் இதோ
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - செந்தில் பாலாஜி , பொன்முடி விடுவிப்பு! முழு விவரம் இதோ
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, பதவியில் இருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா - தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் தமிழ்நாடு அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு!
செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு
நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது
.
Tags: அரசியல் செய்திகள்