Breaking News

ஆவின் நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

ஆவின் நிறுவனத்துல் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவடட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு ஒப்பந்த முறையில் விற்பனை செயலர்களை தற்காலிகமாக பணியமர்த்திட நேர்காணலுக்கு அழைப்பு விடப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும் பிபிஏ (B.B.A) அல்லது எம்.பி.எ (M.B.A) பட்டம் பெற்ற விற்பனை துறையில் ஆர்வம் உள்ள நபர்களை ஒப்பந்த முறையில் விற்பனை செயலர்களாக தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபயமர்த்திட கீழ்க்கண்ட தகுதிகளும் திறமைகளும் உள்ள நபர்களிடமிருந்து நேர்க்காணல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ (B.B.A) அல்லது எம்.பி.ஏ (M.B.A) பட்டம்.

வயது வரம்பு:- 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

பணியிடம்

தலைமை அலுவலகம் சின்னசேலம் (விற்பனை தேவையின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி, உளூந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், வாணாபுரம், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன் மலை ஆகிய தாலுக்காகளில் பணிபுரிய வேண்டும்).

கூடுதல் தகுதிகள்:-

சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி வைத்திருக்கவேண்டும் மற்றும் களப்பணியில் முன்னனுபவம் இருக்கவேண்டும்.

மேற்படி பணிக்காக 02.05.2025-அன்று காலை 11:30 மணிக்கு இவ்வொன்றிய அலுவலகத்தில்(சின்னசேலம் பைபாஸ், EB அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்க்காணலில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சுயவிவரத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : 9043049160, 9787973450

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2025/04/2025042478.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback