மாணவி கர்ப்பம், உதவிப் பேராசிரியர் கைது முழு விவரம்
மாணவி கர்ப்பம், உதவிப் பேராசிரியர் கைது முழு விவரம்
வண்டலூர் அருகேயுள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (45) என்பவர் உதவி பேராசிரியராக வேலைப் பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தாழம்பூர் போலீசாருக்கு மேற்கண்ட பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்து அபார்ஷன் செய்து உள்ளதாகவும், அதில் சிக்கல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டது.
தாழம்பூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் என்பவர் தன்னிடம் பழகி வந்ததாகவும் இதில் தான் கர்ப்பம் அடைந்து விட்டதாகவும், கடந்த மாதம் அவர் திருமணம் செய்து கொண்டதால் தனது கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும், இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னையில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் (45) என்பவரை கைது செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்