Breaking News

சாதி சான்றிதழ்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.!

அட்மின் மீடியா
0

சாதி சான்றிதழ்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஒரு சாதியின் பெயர் தமிழில் ஒரு விதமாகவும், ஆங்கிலத்தில் வேறு விதமாகவும் எழுதப்படலாம், இது சான்றிதழின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

இதனால், உண்மையான பயனாளிகள் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், மேலும் சிலர் போலி சான்றிதழ்கள் மூலம் தவறாக பயன்பெற முயல்கின்றனர். அண்மையில், ‘இசை வேளாளர்’ என்ற சாதியின் பெயரை ‘இசை வெள்ளாளர்’ எனக் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் மாநில அரசு பிழையின்றி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback