Breaking News

திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார் மற்றும் சிதம்பரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். நெல்லை வழக்கறிஞர் சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது

இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் வாக்குகளை சரிபார்க்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு 21 நாட்களுக்கு முன்பே அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும். இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. 

இதனால் விதிமுறைகளை மீறி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே, வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். விதிமுறைப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குழு அமைத்து, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு மற்றும் எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏப்ரல் 29 அன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்தனர். 

மேலும், இந்த மனு தொடர்பாக நெல்லை வழக்கறிஞர் சங்கம் சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback