நாளை காலை வானத்தில் ஸ்மைலியை உருவாக்கும் கோள்கள் முழு விவரம் இதோ
நாளை காலை வானத்தில் ஸ்மைலியை உருவாக்கும் கோள்கள் முழு விவரம் இதோ
ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை அதிகாலையில் நீங்கள் எழுந்திருந்தால், வானத்தில் ஸ்மைலி போன்ற ஒரு அரிய தோற்றத்தைக் காணலாம். இது வெள்ளி, சனி மற்றும் பிறை நிலவு அருகில் வருவதால் ஏற்படுகிறது என்று நாசா விளக்கியுள்ளது. மேலும் இந்த கண்கொள்ளாக் காட்சியை வெறும் கண்களால் கண்டு ரசிக்கலாம்
எப்போது பார்க்கலாம்?
உள்ளூர் நேரப்படி காலை 5:30 மணியளவில், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு, வெள்ளி மற்றும் சனி கிழக்கு வானத்தில் பிறை நிலவுடன் இணையும். இது புன்னகைக்கும் முகம் போன்ற தோற்றத்தை உருவாக்கும்.
பிறை நிலவு புன்னகைக்கும் உதடுகளாகவும் இரண்டு கிரகங்களும் கண்களாகவும் தோன்றும். இந்த அரிய வானியல் நிகழ்வு சுமார் ஒரு மணிநேரம் மட்டுமே தெரியும். பின்னர் சூரிய வெளிச்சத்தில் வானம் பிரகாசமாகிவிடும் என்பதால்
இந்த நிகழ்வைப் பார்க்க சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. வெள்ளி மற்றும் சனி இரண்டுமே வெறும் கண்ணால் பார்க்கும் அளவுக்குப் பிரகாசமாக இருக்கும். இருப்பினும், தொலைநோக்கி மூலம் பார்த்தால் இன்னும் தெளிவாகப் பார்க்கும் அனுபவத்தைப் பெறலாம்.
Tags: தொழில்நுட்பம்