செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு முடித்து வைப்பு - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன முழு விவரம்
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு முடித்து வைப்பு
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வந்தது.
அப்போது வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதமிட்டது. வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்தது.
மீண்டும் அமைச்சராகி ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்களை மீண்டும் தாக்கல் செய்ய வைக்கக்கூடாது, டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல உத்தரவிட வேண்டும்,
செந்தில்பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது எனவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.இதனை கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை.
அவரது ஜாமினுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கிறோம் என்றார். மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை எனக்கூறிய செந்தில் பாலாஜி தரப்பு, பதவியா, ஜாமினா என்ற கேள்விக்கு ராஜினாமா செய்து பதவி விலகி பதில் அளித்துவிட்டார்.
சாட்சி கூண்டுக்கு வராத சாட்சிகளை எப்படி கலைக்க முடியும்? என்றும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் பதவி விலகல் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிப்பார்கள் என்றும் செந்தில் பாலாஜி தரப்பு கூறியது.
Tags: அரசியல் செய்திகள்