சிறுவாணி ஆற்று தண்ணி போல் சுத்தமான ஆட்சியாக தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமையும் - விஜய் அதிரடி பேச்சு முழு விவரம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பூத் ஏஜென்டுகளுக்கான இரண்டாம் நாள் கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
அப்போது பேசிய விஜய்
என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களுக்கும் என் கோவை மக்களுக்கும் வணக்கம்.. நேற்று பேசும்போது இந்த சந்திப்பு வெறும் ஓட்டுக்காக மட்டுமே நடத்தப்படும் சந்திப்பு இல்லை என்று நான் கூறினேன். இது வெறும் ஓட்டுக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. அதனால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் எந்த ஒரு எல்லைக்கும் போக தயங்க மாட்டோம்.
நம்முடைய ஆட்சி அமைந்ததும் ஒரு சுத்தமான ஒரு அரசாங்கமாக இருக்கும். நம்முடைய அரசாங்கத்தில் ஊழல் இருக்காது. ஊழல்வாதிகள் இருக்க மாட்டார்கள். அதனால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தைரியமாக நம்முடைய பூத் லெவல் ஏஜெண்டுகள் மக்களை அணுகலாம்.
நீங்கள் மக்களை அணுகும் போது.. அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன விஷயத்தை இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.. மக்களிடம் செல் மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ்.. மக்களுக்காக சேவை செய்..இதை நீங்கள் புரிந்து செயல்பட்டீர்கள் என்றால் உங்க ஊர் சிறுவாணி தண்ணி மாதிரி அவ்வளவு சுத்தமான ஒரு ஆட்சியா இது அமையும்.
இன்னும் ஸ்ட்ராங்க சொல்ல வேண்டுமானால் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த ஆட்சி ஒரு தெளிவான, ஒரு உண்மையான, ஒரு வெளிப்படையான ஒரு நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக இது அமையும்.
இன்னொரு முக்கியமான விஷயம் வந்து ஓட்டு போடும் மக்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும். இருக்க வேண்டியது நம் கடமை. குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு போவது போல பண்டிகையை கொண்டாடுவது போலவும், நமக்காக குடும்பம் குடும்பமாக மக்கள் கொண்டாட்டத்துடன் ஓட்டு போட வேண்டும். அதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் எல்லோரும் சேர்ந்து செயல்படுங்கள். நம்பிக்கையாக இருங்கள் எல்லோரும் சேர்ந்து செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்.. இவ்வாறு விஜய் பேசினார்
கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் 2ம் நாள் கருத்தரங்கில் விஜய் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல.நமது ஆட்சி மலரும்போது ஊழல் இருக்காது, ஊழல் வாதிகள் இருக்க மாட்டார்கள்.மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்கா வாழு என்று அண்ணா கூறினார்.அண்ணா கூறியது போன்று மக்களிடம் சென்று நம் கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும்.மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.நமது ஆட்சி சிறுவாணி தண்ணீர் போல தூய்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.வாக்குச்சாவடி வரும் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.இவ்வாறு அவர் கூறினார்.
Tags: அரசியல் செய்திகள்