காவல் நிலையத்திற்க்கு வந்த சிறுத்தை! காவலர்கள் பீதி வைரல் வீடியோ!
காவல் நிலையத்திற்க்கு வந்த சிறுத்தை! காவலர்கள் பீதி வைரல் வீடியோ!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் என்ற ஊர் உள்ளது. நேற்று இரவு 8.30 மணி அளவில் நடுவட்டம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பஜாரில் இருந்த காவல் நிலையத்துக்குள் புகுந்தது.
இரவு நேரம் என்பதால் அங்கு அதிகம் காவலர்கள் இல்லை. இதனால் ஹாயாக உள்ளே சென்ற சிறுத்தை நுழைவு வாயில் அறையில் வலம் வந்தது.அந்த நேரத்தில் காவல் நிலையத்தின் மற்றொரு அறையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் சத்தம் போடாமல் அந்த அறையின் கதவை பூட்டிக்கொண்டு அமைதியாக இருந்தார். சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்த பிறகே அறையில் இருந்து வெளியே வந்தார்.
இதனை அடுத்து சிறுத்தை போலீஸ் நிலையத்துக்குள் வந்தது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறைனயினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உடனடியாக அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறுத்தை காவல் நிலையத்துக்குள் புகுந்து உலாவிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1917156485253276157
Tags: வைரல் வீடியோ