அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வேண்டுமா? செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
அட்மின் மீடியா
0
அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வேண்டுமா? செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது
விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பு, தமிழகத்தில் அரசின் காலம் இன்னும் ஒராண்டில் முடிவடையப்போகிறது, அப்போது இவரது அமைச்சர் பதவி முடிவுக்கு வந்துவிடும். இது போன்ற சூழ்நிலையில் வழக்கு விசாரணையில் செல்வாக்கை பயன்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என வாதிடப்பட்டது.
இதனைக்கேட்ட உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்கிய போது அமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பியது.
மேலும் ஜாமீன் வழங்கிய சில நாட்களுக்குள் நீங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறீர்கள், அவர் மீண்டும் அமைச்சராகிறார். இது நீதிமன்றத்தை நீங்கள் கையாளும் முறை அல்ல, கேலிகூத்தாக்குகிறீர்களா ? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Tags: இந்திய செய்திகள்