கர்நாடகா முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் சடலமாக வீட்டில் மீட்பு -நடந்தது என்ன முழு விவரம்
கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், படுகாயங்களுடன் வீட்டின் தரைத்தளத்தில் உயிரிழந்து கிடந்த ஓம் பிரகாஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது சடலத்தில் வயிறு மற்றும் மார்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.இச்சம்பவம் குறித்து பிரகாஷின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில், அவரது மனைவிதான் முக்கிய சந்தேக நபர் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரும், அவரது மகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
முன்னாள் டிஜிபிக்கும் அவரது மனைவிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும் அது மோதலாக மாறி கொலைக்கு வழிவகுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: இந்திய செய்திகள்