Breaking News

ஜவாஹிருல்லாவிற்க்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அட்மின் மீடியா
0

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ. 1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் ஜவாஹிருல்லா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலி ஆகியோருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது மேலும், எஸ்.சையத் நிசார் அகமத், ஜி.எம். ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சியம் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய்யப்பட்டது 

இந்த மனு மீதான விசாரணையில் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். 

மேலும் இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ. 1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback