காஷ்மீர் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி - முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு!
காஷ்மீர் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி - ப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு!
காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில் பெஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பெஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலால் பல அப்பாவிகளின் உயிர் பறிபோயுள்ளது. இந்த மிருகத்தனமான செயல் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நிலைமை குறித்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அனந்த்நாக் மாவட்ட காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்