தெரு நாயை கல்லால் அடித்து கொன்ற முதியவர் மீது வழக்குப்பதிவு முழு விவரம்
தெரு நாயை கல்லால் அடித்து கொன்ற முதியவர் மீது வழக்குப்பதிவு
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பெரிய மேட்டுப்பாளையம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் வீட்டின் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை நாய் அவரைப் பார்த்து குரைக்கவே சாலையில் இருந்த கல்லை தூக்கி நாயின் வயிற்றுப் பகுதியில் அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் நாய் அங்கேயே சுருண்டு விழுந்தது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தன்னார்வலர் சரஸ்வதி என்பவர் படுகாயம் அடைந்த நாயை மீட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் கால்நடை அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாய் உயிரிழந்தது.
இது சம்பந்தமாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தன்னார்வலர் சரஸ்வதி என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நாயின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
Tags: தமிழக செய்திகள்