Breaking News

ஒப்பந்த செவிலியர்களுக்கு இணையாக நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அட்மின் மீடியா
0

நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் தொகுப்பூதிய செவிலியிர்களுக்கு ஊதியம் உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!


நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவிலியர் பணி:-

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 7,243 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும், 8 ஆண்டுகளாகியும் 4,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். 

ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் செவிலியர்களுக்கு முதல் கட்டத்தில் மாதம் ரூ.7,700 சம்பளம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதுவே, நிரந்த செலிவியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

தீர்ப்பு:-

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்வதால் அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். எனவும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 

தொகுப்பூதிய செவிலியர்கள், நிரந்தர செவிலியர்களின் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. 

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback