ஜம்மு - காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது
ஜம்மு - காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியின் புகைப்ப்படம் வெளியானது
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 பேர் பலியான நிலையில், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 12 பேர் அவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஜம்முவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்நிலையில் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பயங்கரவாதியின் பின்னால் இருந்து ஒருவர் எடுத்துள்ளார். இதனால் பயங்கரவாதியின் முகம் தெரியவில்லை. ஆனாலும் பயங்கரவாதி சிவப்பு நிற ஜிப்பா அணிந்து கையில் துப்பாக்கி வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த பயங்கரவாதி உட்பட, மேலும் 3 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்