Breaking News

தமிழக பாஜக புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழக பாஜக புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - கோவையில் அண்ணாமலை பேட்டி  


பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,

நான் மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடவில்லை. நான் யாரையும் கை காட்டவும் இல்லை. இதைப் பற்றி விளக்கமாக கூறவில்லை. நான் எந்த வம்பு சண்டைக்கும் வரவில்லை” என்றார்.

அதிமுக - பாஜக கூட்டணியால் தலைமை மாற்றப்படுகிறாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “அதைப் பற்றி நான் கருத்து கூறவில்லை. நல்லவர்கள் இருக்கக்கூடிய கட்சி; நல்ல ஆத்மாக்கள் இருக்கக்கூடிய கட்சி. அந்தக் கட்சி நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்

 பாஜகவில் தலைவருக்கான போட்டியில்லை. தலைமை தேர்ந்தெடுப்பதுதான். அனைவரும் சேர்ந்து ஏகமனதாகத் தேர்தெடுப்பதுதான். ஒரு விவசாயியின் மகனாக தொடர்ந்து இந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பேன்.

 வருகிற பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இந்த மண்ணைவிட்டு நான் எங்கும் செல்லப்போவது இல்லை என்றார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback