தங்கத்தை உள்ளே போட்டால் உருக்கி பணமாக தரும் ATM சீனாவில் அறிமுகம் - வைரல் வீடியோ gold ATM viral video
தங்கத்தை உள்ளே போட்டால் உருக்கி பணமாக தரும் ATM சீனாவில் அறிமுகம் - வைரல் வீடியோ gold ATM viral video
சீனாவில் உள்ள சாங்காய் நகரில் 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் GOLD ATM அறிமுகம் செய்யப்பட்டுள்ளது !
தங்க ஆபரணங்களை மெஷினில் வைத்தவுடன் அதன் அளவு மற்றும் தூய்மையை கணக்கிட்டு, அதை உருக்கி, உடனடியாக அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த மிஷினில் 3 கிராம் முதல் 1 கிலோ எடையுள்ள நகையை உருக்க முடியும் எனபது குறிப்பிடத்தக்கது
இந்த அதிநவீன இயந்திரம், தங்க நகையை உருக்கி அதன் தூய்மை மற்றும் எடையை மதிப்பீடு செய்து, அந்த மதிப்பிற்கு இணையான தொகையை 30 நிமிடங்களில் வங்கி கணக்கிற்கு செலுத்துகிறது
இது குறித்து வெளியான வீடியோ டெமோவில், 40 கிராம் தங்க சங்கிலி ஒன்றிற்கு கிராமுக்கு 785 யுவான் என மதிப்பீடு செய்யப்பட்டு, மொத்தமாக 36,000 யுவான் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உரிமையாளர்கள் தங்களுடைய தங்க நகைகளை எளிதில் பணமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
In Shanghai, China, there’s a gold ATM that measures the weight of your gold and transfers the equivalent amount to your bank account.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1914633365245796551
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ