Breaking News

காஷ்மீரில் தீவீரவாத தாக்குதல் எதிரொலி -5 முக்கிய முடிவுகளை எடுத்த இந்திய அரசு முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு  5 முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன் விவரம்:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காயமடைந்த 17 பேரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நம் நாட்டில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் பயங்கரவாதிகள் பற்றிய தகவல் தெரிவித்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய 5 முடிவுகள்:-

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானியர்களுக்கு சார்க் விசா கிடைக்காது என்றும், பாகிஸ்தானுடனான அடாரி எல்லை மூடப்படும் என்றும், பாகிஸ்தானில் உள்ள தனது உயர்  அதிகாரிகளை திரும்பப் பெறும் எனவும், சார்க் விசாக்கள் ரத்து, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1ம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற இந்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

  • எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது.
  • பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும்.
  • சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
  • டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
  • இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback