Breaking News

தாம்பரம் - திருச்சிக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தாம்பரம்–திருச்சி இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த கோடைகால சிறப்பு ரயில், ஏப்ரல் 29 முதல் வாரத்தில் 5 நாட்களுக்கும் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.


.
இதன்படி ( Train No. 06190/06191) திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்புரயிலானது ஏப்ரல் 29 முதல் ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. 
இந்த ரயில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படுகிறது. மொத்தமாக இரு மார்க்கத்திலும் 90 சேவைகள் இயக்கப்பட உள்ளது. 
இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்திற்கு மதியம் 12:30 மணியளவில் வந்து சேருகிறது.

இதே போல தாம்பரத்திலிருந்து மதியம் 3. 45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டு ஏசி பெட்டிகள் 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு ரயிலானது தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback