மக்களே உஷார்! புழக்கத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு..மத்திய அரசு எச்சரிக்கை.. எப்படி கண்டுபிடிப்பது? Rs 500 note in your wallet real or fake? Here's how to check
புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
புது வகை ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளது குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தரம் மற்றும் அச்சில், அச்சு அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் மாறாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும் என்றும், RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-க்கு பதில் A இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாகவும், வங்கிகள், செபி, CBI, NIA உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தல் Rs 500 note in your wallet real or fake? Here's how to check
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ போன்ற அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்