தனியார் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு - உரிமையாளர் கைது
அட்மின் மீடியா
0
தனியார் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
மதுரையில் தனியார் மழலையர் பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கே.கே.நகர் தனியார் மழலையர் பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தது. 30 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீர் தொட்டியில் பரிதவித்த 4 வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் மழலையர் பள்ளி ஆசிரியர்களிடம் மதுரை மாநகர துணை ஆணையர் அனிதா விசாரணை நடத்தி வருகிறார். சிறுமி உயிரிழப்புக்கு தனியார் மழலையர் பள்ளியின் அலட்சியமே காரணம் என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை கே.கே.நகரில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளி உரிமையாளர் திவ்யா பத்ரிலட்சுமியை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மதுரை கோட்டாட்சியர் ஷாலினி பள்ளியில்விசாரணை மேற்கொண்ட நிலையில் தனியார்மழலையர் பள்ளிக்கு சீல் வைத்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்