Breaking News

மாதம் ரூ.36 மட்ட்டுமே ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்! மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா உங்களுக்கு pmjjby scheme

அட்மின் மீடியா
0

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது ஒரு வருட கால ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது, இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது, காப்பீடு செய்யப்பட்டவர் ஏதேனும் காரணத்தால் இறந்தால் ₹2 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு. வருடாந்திர பிரீமியம் ₹436 ஆகும், இது சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாக டெபிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டம், பங்கேற்கும் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 50 வயதுடைய நபர்களுக்குக் கிடைக்கிறது. pmjjby scheme



பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) : 

இந்திய அரசு சமுக நலன் கருதி பல்வேறு விதமான திட்டங்களை தன் குடிமக்களுக்கு வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம்.

  • இந்த திட்டத்தில் வெறும் 436 ரூபாய் பிரிமீயம் செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்திற்கு தானாகவே விண்ணப்பிப்பவர்களின் சேமிப்பு வங்கி கணக்கில் இருந்து ரூ.436 டெபிட் செய்யப்படும். இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும்.

  • இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் எடுக்க முடியும். இந்த திட்டத்தினை வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் எடுக்க முடியும்

  • இத்திட்டம் ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை ஒரு ஆண்டு காலத்திற்கு ரூ.2 லட்சம் கவர் வழங்குகிறது. 

  • எந்தவொரு காரணத்தினாலும் ஏற்படும் இறப்புகளுக்கு க்ளைம் செட்டில் செய்யப்படும் 

  • இதில், கோவிட்-18 இறப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 

  • 18-55 வயதுக்கு இடையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் யாரும் விண்ணப்பிக்கலாம்.

  • 55 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து கோவிட்-19 ஆல் இறந்தால் இந்த திட்டம் பயனளிக்காது. 

  • இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரும் மக்கள் தங்கள் க்ளைமை அந்தந்த வங்கிகளில் 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

இறப்பு சான்று, 

மருத்துவமனை ரசீது, 

போட்டோ, 

நாமினியின் வங்கிக் கணக்கு 

இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களது ஆவணங்களை சரிபார்த்து, 30 நாட்களுக்குள் உங்களுக்கு க்ளைம் செய்து கொடுக்கும். 

மேலும் விவரங்களுக்கு மத்திய அரசின் அறிப்பை படிக்க:

https://jansuraksha.gov.in/Files/PMJJBY/English/About-PMJJBY.pdf

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback