3 சவரன் நகைக்காக 70 வயது மூதாட்டி கொலை! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை போரூரில் 3 சவரன் நகைக்காக 70 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை போரூரில் உள்ள வீட்டில் 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வீட்டின் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது அந்த மூதாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சமப்வ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூதாட்டியில் உடலை கைப்பற்றி பிரேத பரிச்சோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மூதாட்டியின் இறப்பில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் நகைக்காக அவரை கொலை செய்துவிட்டு திண்டுக்கல்லில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்தனர். மூதாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதுபடி சித்தரித்தது அம்பலமாகியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்